திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆ.ராசா எம்.பி. ஆலோசனை!
கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை ஆ.ராசா எம்.பி. சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் தலைமையில் நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டக் கழக ஓய்வு விடுதியில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நீண்டகாலமாக கூடலூா் சட்டமன்ற தொகுதியிலுள்ள பிரச்சனைகளை தீா்க்கவும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பல கட்டபோராட்டங்கள் சமீப காலமாக நடைபெற்றது.
தொடா்ந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனா்.இறுதியாக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு லட்சம் மின்னஞ்சல் பொதுமக்கள்சாா்பில் அனுப்பப்பட்டது.
அதன் எதிரொலியாக இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.கூட்டத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் அலுவலா்கள் மட்டத்தில் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் முபாரக்,முன்னால் எம்.எல்.ஏ.திராவிடமணி, பொறியாளா் அணி மாநில துணைச் அமைப்பாளா் பரமேஸ் குமாா்,காங்கிரஸ் கட்சி நிா்வாகி அம்சா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன், விசிக மாவட்ட செயலாளா் புவனேஸ்வரன் உட்பட திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.