செய்திகள் :

திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

post image

திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை - அமைப்புமுறை - செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம்.

இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாக தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் – பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.

அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க