செய்திகள் :

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

post image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பாதுஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதுஷா

மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதுஷா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு வந்த விசாரணையில், பாதுஷா அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுஷா அந்த பெண்ணிடம் மீண்டும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், கொலை நடந்திருக்குமோ என்று சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ரவுடி கோஷ்டியில் ஏற்பட்ட மோதலா என பல்வேறு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

``அவர் குற்றவாளி, ட்ரக் அடிக்ட்; உண்மை தெரியாம பேசாதீங்க!" - கணவர் குறித்து வீடியோ வெளியிட்ட பெண்

பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜ் (38). இவரது மனைவி அட்சயா (25) இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். ராஜா தன் மனைவி குறித்து சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களி... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டிய ஹெட் கான்ஸ்டபிள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்!

ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று சாலையின் இடது, வலது என தாறுமாறாக ஓடுவதை சக பயணிகள் பார்த்துள்ளனர். மற்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு இயக்கப்பட்ட அந்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ்; விடுதி வார்டன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.... மேலும் பார்க்க

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம... மேலும் பார்க்க

கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்முறைகிருஷ்ண... மேலும் பார்க்க