செய்திகள் :

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்

post image

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியருக்கு அம்ரிதா சுரேஷ் (18), ஆனந்த் (17), ரோஷன் (11), அனயா (9) ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் திருவனந்தபுரம் நாலாஞ்சிறா உதியன்னூர் கோவில் அருகே கீர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் லீசுக்கு குடியிருந்து வந்தனர். சுரேஷ் குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டாலும், பிள்ளைகளைத் தவறாமல் பள்ளியில் கொண்டு போய் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

​ஹசீனாவிற்கு வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் இருப்பதாகக் கூறி சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பிரச்னை முற்றியதால் ஹசீனா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை அவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினார். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. ​

இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை மண்ணந்தலா காவல் நிலையத்தில் ஹசீனா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் சுரேஷ் மற்றும் ஹசீனாவை அழைத்துச் சமரசம் பேசி இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், செவ்வாய்க்கிழமை இரவிலும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை சுமார் 4.30 மணியளவில், மேல் மாடியில் உள்ள படுக்கையறையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியது.

அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவி ஹசீனாவின் கழுத்தை அறுத்த கொடூரமாகக் கொலை செய்தார். அந்த சமயத்தில் மாடிக்குச் சென்ற அவர்களது மூத்த மகள் அம்ரிதா கொலையை நேரில் பார்த்துள்ளார்.

ஹசீனா கொலை குறித்து போலீஸ் விசாரணை

ஹசீனாவின் மகள் அம்ரிதா சுரேஷ் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ஹசீனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​இதற்கிடையே, தப்பியோடிய சுரேஷ் தனது மூத்த மகள் அம்ரிதாவை தொலைபேசியில் அழைத்து, 'அப்பா இனித் திரும்பி வரமாட்டேன், தம்பி, தங்கைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். அந்தச் சமயத்தில் அவர்கள் வீட்டில் இருந்த மண்ணந்தலா போலீஸார், அழைப்பு வந்த எண்ணிற்குத் திரும்ப அழைத்த நிலையில், தொடர்பு கொள்ள முடியவில்லை. ​

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஹசீனாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, பிள்ளைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தது. தப்பியோடிய சுரேஷை கைதுசெய்ய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் டவர் இருப்பிடத்தை மையமாகக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சுரேஷின் மொபைல்போன் திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அவரது கார் பாலராமபுரம் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர் ரயிலில் தமிழ்நாட்டுக்குச் சென்றதாக தெரியவந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் சிதம்பரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அதுகுறித்து கேரள போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அது சுரேஷ் என தெரியவந்தது. மனைவியை கொலைசெய்துவிட்டு சுரேஷ் தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலைச் செய்யப்பட்ட ஹசீனா, தற்கொலை செய்த சுரேஷ்

ஹசீனா வீட்டில் பிரச்னை காரணமாக பள்ளி திறந்து சில நாட்களாக குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை. எனவே, பள்ளி ஆசிரியை ஹசீனாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பிள்ளைகளுக்குக் காய்ச்சலாக உள்ளது, சரியானதும் பள்ளிக்கு அனுப்புகிறேன்" என ஹசீனா வாட்ஸ்அப்பில் குரல் பதிவு அனுப்பியிருந்தார். ​இதற்கிடையே தாய் கொலைச்செய்யப்பட்ட நிலையில் தந்தையும் தற்கொலை செய்துகொண்டதால், ஆதரவின்றி தவித்து நிற்கின்றனர்.

காதல் திருமணம் காரணமாக ஹசீனா மற்றும் சுரேஷ் ஆகியோர் உறவினர்களுடன் பெரிய அளவில் தொடர்பில் இல்லாத நிலையில், மரணச் செய்தி கேட்டு அதிகமாக ஆட்கள் வரவில்லை. தனியாக தவிக்கும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள்தான் நெஞ்சோடு அரவணைத்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்முறைகிருஷ்ண... மேலும் பார்க்க

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வ... மேலும் பார்க்க

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர்கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாகமதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனிப்படை போலீ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி

இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு ... மேலும் பார்க்க

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது... மேலும் பார்க்க