செய்திகள் :

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

post image

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது.

முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 24 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 41/1 ஆக இருந்தது.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

ராகுல் - சாய் சுதர்சனின் வலுவான பார்ட்னர்ஷிப்!

முதல் விக்கெட்டை விரைவில் இழந்தாலும், அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், இந்திய இன்னிங்ஸை வலுவாக கட்டமைத்தார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொறுமையுடன் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. ராகுல் தனது 21-வது டெஸ்ட் அரைசதத்தை கடந்தார், மறுமுனையில் சாய் சுதர்சனும் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில், தனது முதல் சதத்தை நோக்கி முன்னேறிய சாய் சுதர்சன், 81 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

சதமடித்த கையோடு வெளியேறிய ராகுல்!

அடுத்து கேப்டன் ஷுப்மன் கில் களத்திற்கு வந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுல், தனது 12-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால், சதம் அடித்த அடுத்த பந்திலேயே கவனக்குறைவாக ஆடி, கவர் திசையில் கேட்ச் கொடுத்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 247 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ராகுல்
ராகுல்

கேப்டன் கில், அதிரடி பண்ட் அசத்தல்!

இதன்பின்னர் கேப்டன் ஷுப்மன் கில்லும், ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்தனர். கில் தனது கிளாசான ஆட்டத்தை வெளிப்படுத்த, பண்ட் தனது வழக்கமான அதிரடி பாணிக்கு மாறினார். தொடக்கத்தில் சில பந்துகளில் தடுமாறினாலும், நோ-பால்களால் கிடைத்த இரண்டு லைஃப் லைன்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்துல் மாலிக் வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். மறுமுனையில், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்காமல் ஆடிய கேப்டன் கில், 138 பந்துகளில் தனது 11-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். நாள் முடியும் தருவாயில், ரிஷப் பண்ட்டும் 70 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

கில்
கில்

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் 100 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதால், இரண்டாம் நாளில் நல்ல ஸ்கோரை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சலீம் சைஃபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! - இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்!

இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவது மட்டும... மேலும் பார்க்க

கோலிக்கு அவமரியாதை? `இது குரூரம்!' - இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்காக கொந்தளித்த ஹர்ஷா போக்ளே!

ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பர... மேலும் பார்க்க

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் - யார் இவர்?

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையேசேரும். தொடர்ச்சியாக... மேலும் பார்க்க

ஏலம், பரிசு, சம்பளம், ஆட்ட நாயகன்... IPL 2026-ல் வைபவ் சூரியவன்ஷி சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2026 தொடர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கோப்பைக் கனவை இரண்டாவது முறையாக நிறைவேற்றியிருந்தாலும், இந்தத் தொடரின் உண்மையான நாயகனாக ஜொலித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைப... மேலும் பார்க்க

'பிரஷரா இருக்கு!' சாதனைகளுக்குப் பின்னால் அழுத்தம் - ரவி சாஸ்திரியிடம் மனம்திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் 2026 தொடர், கிரிக்கெட் உலகுக்கு ஒரு புதிய சூப்பர் ஸ்டாரை அடையாளம் காட்டியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வெறும் 15 வயதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களமிறங்கி, விராட் கோலி, சுப்மன் கில... மேலும் பார்க்க