செய்திகள் :

'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!

post image

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

ஒரு கமர்ஷியல் மசாலா படமாக வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில், ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தள பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் புச்சி பாபு சனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ``திரைப்படம் என்பது மக்களை மகிழ்விப்பதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும், அவர்களோடு இணைவதாகவும் இருக்க வேண்டும். அது யாருக்கும் சங்கடத்தையோ அல்லது அவமதிப்பையோ ஏற்படுத்தக் கூடாது. 'பெத்தி' படத்தின் சில காட்சிகள் குறித்து வந்த விமர்சனங்களை நாங்கள் தீவிரமாகக் கவனித்து ஏற்றுக்கொள்கிறோம். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்கள் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

ஜான்வி கபூர் - இயக்குநர் புச்சி பாபு சனா
ஜான்வி கபூர் - இயக்குநர் புச்சி பாபு சனா

எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் தவறாகக் காட்டவோ அல்லது அவமதிக்கவோ நாங்கள் நினைக்கவில்லை. படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், மக்களின் அந்த உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளித்து, எங்கள் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் கருத்துக்களை ஆய்வு செய்த பின், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடனும், மதிப்புடனும் சித்தரிக்கப்பட தகுதியானவர்கள்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் ... மேலும் பார்க்க

`சமந்தா விவாகரத்து வதந்திகள், ஆபாச சித்தரிப்புகள்' - நீதிமன்றத்தை நாடிய நாக சைதன்யா

இணையதளங்களில் தனது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவைத் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, 2021-ல் விவாகரத... மேலும் பார்க்க

Peddi: ``சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு பொதுச்சேவைக்கு வந்த முதல்வர் விஜய்" - ராம் சரண் வாழ்த்து

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்... மேலும் பார்க்க

Peddi: ``இனி முழு கமர்சியல் பாதைதான்..." - காரணத்தைப் பகிர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்... மேலும் பார்க்க

Peddi: ``பாண்டி பஜாரும் 12B பஸ்ஸும்..." - சென்னை நினைவுகள் குறித்து சிவ ராஜ்குமார் நெகிழ்ச்சி!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்... மேலும் பார்க்க

"கம்ஃபோர்ட்டான இடத்தை விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களைச் செய்வதுதான் பிடிக்கும்" - ஜான்வி கபூர்

ராம் சரண், ஜான்வி கபூர் இணைந்து நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம், ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண் - பெத்தி திரைப்படம்டோலிவுட்டில் 'உபெனா' படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்தப்... மேலும் பார்க்க