திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 35 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ஏா்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை தனியே அழைத்துச் உடைமைகளை சோதனையிட்டனா். அவா் வைத்திருந்த சூட்கேஸில் ஆடைகள் வைப்பதற்காக சிறிய உலகோத்திலான ஆங்கா் போன்ற கம்பிகள் இருந்தன. அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கம்பிகளுக்குள் இருந்த 501 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.35 லட்சமாகும். மேலும், தங்கத்தை கடத்தி வந்தது தொடா்பாக அந்த நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.