செய்திகள் :

திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

post image

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சமுதாய நலக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடந்ததால் இந்த சமுதாய நலக்கூடமானது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து விகடனில் 'திருநெல்வேலி: மூடிக்கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!' என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டோம்.

அச்செய்தியில் மக்கள் இந்த சமுதாய நலக்கூடமானது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசௌகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது என்றும், இந்தச் சமுதாய நலக்கூடமானது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அச்செய்தியானது உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. சிறிது நாள்களிலேயே உள்ளே வளர்ந்துகிடக்கும் புதர்கள், முட்செடிகள் போன்றவற்றை சுத்தம் செய்து, சமுதாய நலக்கூடத்தை குறிப்பிட்ட காலத்தில் சீரமைத்து தற்போது வண்ணம் பூசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது,

"இச்செய்தி வெளிவந்திருந்ததை அறிந்தோம். ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தை சீரமைப்பதற்கான வேலைகளையும் அதன் பிறகு உடனே துவங்கிவிட்டோம். பழுதடைந்த சமுதாய நலக்கூடத்திற்கு நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருந்தோம். நிதி வந்தவுடன் வேலையைத் தொடங்கிவிட்டோம். விடுதியாக, அலுவலகமாகப் பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சமுதாய நலக்கூடத்தை மறுசீரமைப்பு செய்து வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த பின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த சமுதாய நலக்கூடமானது பயன்படுத்தப்படும்." என்று கூறினார்.

சீரமைக்கப்பட்டு வரும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இன்னும் சிறிது காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழ... மேலும் பார்க்க

TVK: தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் அமைச்சர்கள் - யாருக்கு என்ன துறை?

கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான... மேலும் பார்க்க

``நான் ஆசிரமத்துக்குப் போகிறேன்... இனி அங்குதான் இருப்பேன்!" - பிரசாந்த் கிஷோரின் அதிரடி முடிவு

தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக பீகாரில... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர்மன்ற கவுன்சிலர் டு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர்! - யார் இந்த காந்திராஜ்?

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரே தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியைக் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களாக அ.தி.மு.க தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த முறை அ.தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி த... மேலும் பார்க்க

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்; `முதல்வரிடம் பேசினோம்'- சிபிஎம் சண்முகம் விளக்கம்!

மே10-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது. வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து... மேலும் பார்க்க

CJP: ‘நாங்க கரப்பான்பூச்சி தான்’ - தெறிக்கவிடும் இளைஞர்கள்; ஆளும் கட்சியை அலறவிடும் புதுவித அரசியல்

‘இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்!’ என்ற ஒற்றை முழக்கத்துடன், வெறும் நான்கு நாட்களில், உலகின் மிகப்பெரிய கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆளும் பா.ஜ.க-வையே இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவ... மேலும் பார்க்க