செய்திகள் :

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

post image

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது,

"இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது.

அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்" என்று மக்கள் கூறினர்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, "ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம்" என்றனர்.

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`துரோகி நண்பா.. டோன்ட் வொர்ரி!'- ராகுல் - மத்திய இணை அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம்! | Viral Video

2020-ல் இந்தியா - சீனா இடையே நடந்த ஃபேஸ்-ஆஃப் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய `Four Stars Of Destiny'என்ற புத்தகத்தைக் கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ... மேலும் பார்க்க

வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏ... மேலும் பார்க்க

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க