செய்திகள் :

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் - மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்?

post image

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் க.தேவராஜி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான தேவராஜி பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியதால், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தோல்வி குறித்த கள ஆய்வுக்குவந்திருந்த குழுவினரிடம், ``திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க விவகாரங்களில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலையிடக் கூடாது. மாவட்டச் செயலாளர் தேவராஜியை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று உடன்பிறப்புகள் வெடித்துபேசி, அதிருப்தியை வெளிப்படுத்தி குமுறியிருக்கிறார்கள் என்கிற தகவல் பரபரக்கிறது கட்சி வட்டாரத்தில்.

இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ஆய்வுக் குழுவினர் தொகுதி வாரியாக 28-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நான்கு தினங்கள் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பில் ஈடுபட்டனர்.

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் க.தேவராஜி

முதல் நாள் ஜோலார்பேட்டை தொகுதி நிர்வாகிகளுக்கான சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் உமா கண்ரங்கம் உள்ளிட்ட மேலும் பலர், `மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும். அவரின் செயல்பாடுகளால்தான் கட்சிக் கபளீகரமாகிவிட்டது’ என்று குற்றம்சாட்டினார்கள்.

அடுத்த நாள் 29-ம் தேதி, திருப்பத்தூர் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும், அங்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அ.நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.கே.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு எதிராகவே புகார் தெரிவித்தனர் என்கிறார்கள்.

மறுநாள் வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும் வாணியம்பாடி நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுமே எ.வ.வேலு, தேவராஜி ஆகிய 2 பேர் மீது புகார்களை அடுக்கினர்.

ஆம்பூர் தொகுதி சந்திப்பின்போதும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

``41 தொகுதிகளுக்கான வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டதே தவறு. அவர் `சுய-சமூக’ அரசியல் பற்றுடன் செயல்பட்டுவந்தார். இதனால், பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமூக மக்கள் தி.மு.க-வை ஆதரவிக்கவில்லை. இதன் எதிரொலியாகவே, 41 தொகுதிகளில் 6-ல் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தோல்விக்குப் பிறகாவது, தி.மு.க தலைமை சிலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எந்த வகையிலும், எ.வ.வேலு பொறுப்பாளராகத் தொடரக் கூடாது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

அதேபோல, 72 வயதாகும் மாவட்டச் செயலாளர் தேவராஜி உடன்பிறப்புகள் ஒருவரையும் அரவணைத்துச் செல்வதில்லை. தேவராஜியின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளில், தி.மு.க 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் தேவராஜி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அந்தச் சமூக மக்களிடம் அவருக்கான செல்வாக்குக் கொஞ்சம்கூட இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

அதேபோல, ஆம்பூர் தொகுதியில் தி.மு.க மீண்டும் வெற்றிபெற்றிருந்தாலும், எம்.எல்.ஏ வில்வநாதனின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளிலுமே தி.மு.க 3-வது இடத்துக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறது. வில்வநாதனை மீண்டும் வேட்பாளராக அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க-வில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் விலகினார்கள். இதன் எதிரொலி, வில்வநாதன் ஒன்றியச் செயலாளராக இருக்கும் பகுதியிலும் தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இதையெல்லாம், ஆய்வுக் குழுவினரிடம் எடுத்துக்கூறியுள்ளோம். கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனில், இளையச் சமுதாயத்தை வழிநடத்தும்வகையில் நடுத்தர வயதுமிக்க நிர்வாகியை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுவாக முன்வைத்திருக்கிறோம்’’ என்கின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள்.!

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க