செய்திகள் :

திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது...'- சேகர் பாபு

post image
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற முதல்வர் உறுதிமிக்க முதல்வர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம்

அரசியல் குளிர்காயலாம் என்று இந்தப் பிரச்னையை கையில் எடுப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இந்த அரசு. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அதன்படிதான் இந்த அரசு செயல்படும். கூடிய விரைவில் துறையின் அமைச்சர் என்ற வகையில் அந்த மலைக்கு சென்று விசாரிக்க உள்ளேன்.

இந்துக்களும், முஸ்லிம்களும் மாமன், மச்சான் போன்று பழகி வருகின்றனர். அதனை கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைப்போல் வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக இது போன்ற நாடகம் நடத்துகிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று சொல்ல வேண்டாம். அவர்கள் பாஜக,-வை சேர்ந்தவர்கள்தான் ” என்று சேகர் பாபு பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க..." - அண்ணாமலை பரபரப்புப் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமை... மேலும் பார்க்க

'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல்... மேலும் பார்க்க

``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் ... மேலும் பார்க்க

Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்!

கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் ம... மேலும் பார்க்க