செய்திகள் :

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

post image

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கின் விசாரணையின்போது, 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலேயே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் தவறாக நினைக்கும் பட்சத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதற்கும் தயார்' என, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, `திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக் கொள்ளலாம்' என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

அதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

அரசு தரப்பில், `நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் 5 நபர்களை தீபம் ஏற்ற இருக்கும் தூணில் பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக முடிவு செய்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிய நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது' எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், `அவ்வாறு அனுமதிப்பதில் என்ன சிக்கல்?' எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், `நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழக்கிற்கான அதிகாரத்தைக் கடந்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தரப்பில், `தீபம் ஏற்றுவதற்கு அரசு போதுமான ஏற்பாடுகள் செய்து தரவில்லை. அதற்காகவே அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், `நீதிமன்ற உத்தரவு விவரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம்

மேலும், 5 நபர்களை பரிந்துரைப்பதில் பிரச்சனை எனில், கோயிலே பூஜை செய்யலாமே? சிறிய விஷயம், அதைச் செய்து பிற பிரச்னைகளைத் தவிர்க்கலாமே?' எனவும் கருத்து தெரிவித்தனர்.

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர... மேலும் பார்க்க

`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ... மேலும் பார்க்க

``முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ... மேலும் பார்க்க

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் - நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர் தான் தங்கி இருந்த மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சோகமான விபத்துக்குப் பிறகு கடந்த ... மேலும் பார்க்க

மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன... மேலும் பார்க்க