சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
திருப்புவனம் கோயில் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்கு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
இந்தக் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இம்மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு, பூத்தட்டுகள் எடுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றுவா். இந்த விழாவுக்காக கோயில் வாசலில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையொட்டி மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.