செய்திகள் :

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தம்பதியரிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கௌசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தைத் தனக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமென கெளசல்யா, கடந்த ஓராண்டாக தனது தந்தையிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு கெளசல்யாவின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த கெளசல்யா, விரக்தி அடைந்த மனநிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பில் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

கெளசல்யா
கெளசல்யா

தொடர்ந்து உடலில் தீப்பற்றவே அலறியபடி ஓடினார். விடுமுறை நாள் என்பதால் அருகில் யாரும் இல்லை. தீக்காயம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கெளசல்யாவை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 80 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கெளசல்யாவின் கணவர் பிரபாகரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிந்து சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து, நேற்று மாலை கணவர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.... மேலும் பார்க்க

சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்... மேலும் பார்க்க

Himachal: 8 வயது தலித் சிறுவன் மீது ஓராண்டாக தாக்குதல் - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் 8 வயது தலித் சிறுவனை தாக்கியதாகவும், கால்சட்டையில் தேளை விட்டு கொடுமைபடுத்த... மேலும் பார்க்க

கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி(19), கல்லூரி மாணவி. இவரின் தாய் பிரியதர்ஷினி பெங்களூரில் ஒரு ஸ்கூலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். ஸ்ரீகுட்டியின் சகோதரர் ஸ்ரீகுமார... மேலும் பார்க்க

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க