செய்திகள் :

`திருமணத்துக்கு யாரும் பெண் தரல; உறங்க மது குடிக்கிறேன்!' - கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

post image

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதோடு அவர் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற செய்தி பரவியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் நின்று போனது.

கொரோனாவுக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது. இப்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பேட்டியில், ''மக்கள் மோசமானதை பரப்புவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். நான் 16 முதல் 19 வயதில் கிரிக்கெட் உலகில் பயணம் மேற்கொண்டேன். இந்த வயதில் எப்படி ஹோட்டலில் மது கொடுப்பார்கள். நான் ஒருபோதும் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது. ஆனால் பின்னாளில் மது எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் 19 வயதில் என்னை மதுவிற்கும், போதைக்கும் அடிமையானவன் என்று செய்தியை பரப்பினர்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்து எனக்கு திருமணத்திற்கு பெண் தேட மேட்ரிமோனியல் தளத்தில் எனது பெற்றோர் விளம்பரம் கொடுத்து இருந்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அதனை பார்த்தபோது ஒருவர் கூட என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை. மக்கள் எனது நற்பெயரை மிகவும் மோசமாக்கியுள்ளனர், யாரும் தங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை.

1987ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்து நாடு திரும்பியபோது தமிழ்நாடு தேர்வுக்குழுவினர், `நீங்களே உடல் தகுதி பெறவில்லை' என்று மீடியாவில் தெரிவித்துவிடும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

`ஆனால் நான் அப்படி கூற முடியாது, வேண்டுமானால் என்னை நீங்கள் அணியில் இருந்து நீக்கிக்கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டேன். இப்போது மோசமாக இருக்கிறேன். கண்ணாடியில் என்னைப் பார்க்க விரும்பவில்லை. நான் எதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மது குடித்துவிட்டு தூங்குவேன். நான் விழித்திருக்கும் போதெல்லாம், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். தூங்குவதற்காகவே மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். சில சமயங்களில், தற்கொலை எண்ணங்கள் மனதில் தோன்றின. சில சமயம் துபாயில் பயணிக்கும் போது வேகத்தடை இருக்காது. வாகனம் அதிவேகமாக சென்றால் கதவைத் திறந்து வெளியே குதிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஏதோ சொல்லும். எப்படியோ ஏதோ ஒன்று முட்டாள்தனமாக எதையும் செய்ய விடாமல் தடுத்தது.

கண்களை மூடும்போது கற்பனை செய்ய முடியாத படங்களைப் பார்க்கிறேன். அவை அனைத்தும் மிகவும் பயமுறுத்துகின்றன. கண்களைத் திறந்தால், எதுவும் இல்லை. ஆனால் மிகவும் சோர்வாக இருக்கிறது''என்று தெரிவித்தார்.

'நீங்க 60 வயசு வரைக்கும் ஆடணும் சார்' - SK வுக்கு தோனி சொன்ன பதில் என்ன?

'Roar 26' என்ற பெயரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரர்களுடனான போட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி என களைகட்டிய இ... மேலும் பார்க்க

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

'Roar 26' சி.எஸ்.கே ரசிகர்களுக்காக அணி நிர்வாகம் ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் சென்னை அணியின் முன்னாள் 'OG' வீரர்கள் ஒரு அணியாகவும், இப்போதைய வீரர்கள் ஓர் அ... மேலும் பார்க்க

ஆரோவில்லில் சீறிப்பாய்ந்த குதிரைகள்; திரண்ட பார்வையாளர்கள் - தேசிய அளவிலான குதிரைப் போட்டி | Album

தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரைகள்தடுப்புகளை தாண்டும் குதிரை... மேலும் பார்க்க

மகுடம் சூடா மன்னர்கள்: ஐபிஎல் வரலாற்றில் 'ஆரஞ்சு தொப்பி' வெல்லாத 6 ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா?

ஐபிஎல் என்றாலே சிக்ஸர்களும், சதங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு தொப்பி', ஒரு பேட்டருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம். விராட்... மேலும் பார்க்க

பெருங்கனவை நோக்கி பெடல்களை மிதிக்கும் கல்லூரி மாணவி - சாதிக்க தடை போடும் பொருளாதாரப் பிண்ணனி!

சேலம் மாவட்டம், மரவனேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிதா, கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் பெற்று அசத்தியிருக்கிறார்.ஆனால் இ... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சி: விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட அரசு வழங்கும் உதவிகளும், ஊக்கத்தொகைகளும்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களி... மேலும் பார்க்க