செய்திகள் :

திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

post image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.

கலியபெருமாள் மனைவி தேவியிடம் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பல ஆண்டுகாலமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் காரக்கோட்டை இந்திராநகர் பகுதியில் மனைவி தேவியும் மகன் அய்யப்பனும் வசித்து வந்தனர்.

பொறியியல் பட்டதாரியான அய்யப்பன் வேலைவாய்ப்பற்ற நிலையில் மன உளச்சலில் கஞ்சா போதைக்கும் அடிமையாகி உள்ளார். இதனால் பல மதுபோதை ஆசாமிகளுடன் அவ்வப்போது அலைபேசியில் உரையாடுவதும், தந்தையிடம் இதற்காக பணம் கேட்பதுமாகவே இருந்தது இவரின் போக்கு.

அய்யப்பன்

போதைக்கு அடிமையான மகனை மீட்கும் நோக்கத்தில் அய்யப்பனின் தந்தை ஒரு கட்டத்தில் பணம் அனுப்புவதை நிறுத்துவிட்டார். தந்தை பணம் அனுப்பாமல் இருப்பதற்கு தாத்தா பாட்டிதான் காரணம் என எண்ணி தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் பேரன் அய்யப்பன்.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் அதிகாலை தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற கஞ்சா ஆசாமி அய்ப்பன், அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மதிமயங்கிய போதையில் தனது தாத்தா மற்றும் பாட்டியை பீர் பாட்டிலால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்தும் மனசாட்சியின்றி கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

உயிர் பிரிந்த நிலையிலும் ஆக்ரோஷம் தீராத போதை அரக்கன் அவர்களின் உடலை எண்ணெய் ஊற்றி எரித்து, தீ-க்கு இறையாக்கினார்.

பிறகு வீட்டிற்கு சென்ற அவர், தன் தாய் தேவியிடம் செய்த கொலையை சர்வசாதாரணமாக கூறியுள்ளார். அதனைக்கேட்ட தாய்‌ அதிர்ச்சியில் உறைந்தார். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடுவூர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யப்பனின் தாய் கொடுத்த புகாரின் பேரில், வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு அய்யப்பனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்குடி பகுதியில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. விரைந்து மன்னார்குடி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஓரே வேண்டுகோளாக உள்ளது.

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீ... மேலும் பார்க்க

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க

திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட... மேலும் பார்க்க

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள... மேலும் பார்க்க