செய்திகள் :

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

post image

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி லிங்ககனி ஆகியோரின் வீட்டிற்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்துள்ளான். 

இந்த நிலையில், சிறுவன் உதய சுதர்சன் வீட்டின் வெளியே பந்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்
குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

அப்போது விளையாடிய பந்து, அருகில் உள்ள சௌந்தரராஜன் என்பவரது வீட்டின் அருகே இருந்த ஒரு சிறிய சந்திற்குள் விழுந்துள்ளது. அந்தச் சந்தில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சௌந்தரராஜன் அந்தச் சந்தை ஓலைகளை வைத்து மறைத்து வைத்துள்ளார்.

இதையறியாமல், பந்தை எடுப்பதற்காக அந்த ஓலைகளைப் பிரித்துக்கொண்டு சிறுவன் உள்ளே சென்றபோது, அங்கு எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதில், சிறுவனின் வலது கை மற்றும் வலது நெஞ்சுப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், மின்சாரம் தாக்கிய வேகத்தில் சிறுவன் உதய சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

மின்கசிவு குறித்துத் தெரிந்திருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா அல்லது மின்சாரத் துறையின் அலட்சியமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் - ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாத உரிமம் ... மேலும் பார்க்க

திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது ஆக்கிடாவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜாமணி கடந்த 3 மாதங்களுக்... மேலும் பார்க்க

"பாஜக-வின் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா" - ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

நாட்டையே உலுக்கிய 2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்தின் வடு மறைவதற்குள், நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் ஒரு இளம்பெண் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி... மேலும் பார்க்க

`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப... மேலும் பார்க்க