செய்திகள் :

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

post image

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ‘தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்

எஸ். ஜானகி

நடிகர் கமல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘ பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?

இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் தனது இரங்கல் செய்தியில் ‘ இந்திய திரையுலகின் ஒப்பற்ற பின்னணி பாடகி, கன்னட திரையுலகின் மேரு கலைஞர், "கானகோகிலா" திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமது குரல் வளத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இல்லங்களிலும் இதயங்களிலும் இடம்பிடித்திருந்த பன்மொழி பாடகி ஜானகம்மாவின் மறைவால் இசை உலகம் மௌனமாகிவிட்டது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

பல பாடகர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்த, எளிமையின் வடிவமாக விளங்கிய ஜானகம்மாவின் ஒப்பற்ற குரல் கன்னட நாட்டின் கலாச்சார துறையில் என்றென்றும் அழியாதது. இறைவன் அவரது ஆன்மாவுக்கு நிரந்தர சாந்தி அளிக்கட்டும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி’ என்று கூறியுள்ளார்

மறைந்த எஸ். ஜானகி அவர்களின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்துமாறு முதலமைச்சர் டி கே சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் - மைசூரில் உயிர் பிரிந்தது!

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடிய பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, இன்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பலல்படலா என்ற ஊரில் 1938, ... மேலும் பார்க்க

பாரதிராஜாவும் பாக்யராஜும் – நாம் கொண்டாடத் தவறிய 5 அரிய திரைப்படங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: `கணவரை விட உங்களை நேசிக்கிறேன்!’ - ரசிகையின் பேச்சு; பக்குவமாக பதிலளித்த ஷாருக் கான்

திரைப்பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம். அப்படி வரும் எதிர்பாராத கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பிரபலங்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என... மேலும் பார்க்க