செய்திகள் :

தென்னை மரத்தை அகற்றக்கோரி பக்கத்து வீட்டுகாரர் வழக்கு! - பைபிள் வசனம் கூறி தள்ளுபடி செய்த கோர்ட்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர். ரஞ்சித் வீட்டில் வளர்ந்து நின்ற தென்னை மரத்தில் இருந்து தேங்காய், ஓலை உள்ளிட்டவை தனது வீட்டு வளாகத்திக் விழுவதாகவும், அதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி கோபிநாத் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் விவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து தனது பக்கத்து வீட்டாரின் தென்னை மரம் தனது வீட்டிற்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி கரகுளம் ஊராட்சியில் புகார் அளித்திருந்தார் கோபிநாத். அவரது புகாரைத் தொடர்ந்து தென்னை மரத்தின் உரிமையாளர் ரஞ்சித் அந்தத் தென்னை மரத்தை இரும்புக் கம்பியால் இழுத்துக் கட்டினார். மேலும் தேங்காய்கள் எதிர்பாராதவிதமாக விழுந்து ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க அதன் உச்சியில் வலையையும் கட்டியிருந்தார்.

அதில் திருப்தியடையாத பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரத்தை ஆராய உயர் நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் கமிஷனை நியமித்தது. அதற்கான செலவுத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை ஏற்கவும் மனுதாரர் கோபிநாத் தயாராக இருந்தார். வழக்கை விசாரித்த கமிஷன், "தென்னை மரம் பலவீனமாக இல்லை என்றும், தேங்காய்கள் கீழே விழாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அறிக்கை சமர்ப்பித்தது.

கேரள உயர்நீதிமன்றம்!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "உன்னைப்போல் உன் அயலரையும் நேசிப்பாயாக" என்ற விவிலிய (பைபிள்) வசனத்தை அறிவுரையாகக் கூறி கேரள உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. ஆபத்து என்று வரும்போது உதவிக்கு அண்டை வீட்டாரே முதலில் வருவார்கள் என்றும் நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் இந்த மனுவை விசாரிக்கும் போது நினைவூட்டினார்.

இதுகுறித்து நீதிமன்றம் தனது உத்தரவில், ​"ஒரு கப் டீ குடித்துக்கொண்டே பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கின் தரப்பினர் காட்டும் கடுமையான போக்கை நீதிமன்றம் காட்ட விரும்பவில்லை.

வழக்குக்கு காரணமான தென்னைமரம்

ஒருவேளை தென்னை மரத்திற்குச் சிரிக்கும் திறன் இருந்திருந்தால், இந்தச் சண்டையைப் பார்த்து அது சிரித்திருக்கும். அதற்கு தானாகவே விழுந்துவிடும் சக்தி இருந்திருந்தால், தானாகவே விழுந்து இந்தச் சண்டையைத் தவிர்த்திருக்கும்" என்று நகைச்சுவையுடன் கோர்ட் சுட்டிக்காட்டியது. ​தற்போது அந்தத் தென்னை மரத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இதற்கு மேல் இதில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

திருச்சி: திருமணம் மீறிய உறவில் கணவர்; தட்டிக் கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 44). தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், சாவித்ரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது),(39) என்பவருக்கு... மேலும் பார்க்க

ரூ.17 கோடி அரண்மனை, தனி விமானங்கள்! வருங்கால மனைவியால் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வால் யார்?

புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. கோடிக்கணக்கில் செலவ... மேலும் பார்க்க

3 முறை முயன்று, 4வது முயற்சியில் வருங்கால கணவனை கொன்ற இளம்பெண்! - வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

புனேயில் லோஹாகட் கோட்டையில் கேதன் அகர்வால் என்பவர் மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கேதனின் வருங்கால மனைவி ஷியா மற்றும் ஷியாவின் காதலன் ஆகியோர் கைது செய்... மேலும் பார்க்க

திருமணத்துக்கு ரூ.17 கோடிக்கு அரண்மனை முன்பதிவு - வருங்கால கணவனை, காதலன் துணையோடு கொன்ற மணப்பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் அகர்வால் மகன் கேதன் அகர்வாலுக்கும், ஷியா கோயல் என்ற பெண்ணிற்கும் இடையே வரும் நவம்பர் மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு மு... மேலும் பார்க்க

மது + எலி மருந்து: சத்தமே இல்லாமல் 4 மாதத்தில் 8 பேரை கொலை செய்த கொலைகாரன்!

சத்தீஷ்கர் மாநிலம் பலோடபஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே என்ற கிராமத்தில், துப்பாக்கிச் சூடு, அலறல் அல்லது இரத்தக்களரி இல்லாமல் அடுத்தடுத்து மரணங்கள் நடந்து கொண்டே இருந்தது. பல மாதங்களாக, கார்வேயில் ஆண்க... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ... நடந்தது என்ன?

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயி... மேலும் பார்க்க