செய்திகள் :

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

post image

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.ரவி தலைமை வகித்தாா். சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீ தேவி அசோக், பெருந்துறை வட்டாட்சியா் சி.செல்வகுமாா், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தோ்த் திருவிழாவை முன்னிட்டு தடையற்ற மின்சாரம் வழங்குவது, பாதுகாப்பு மற்றும் குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள், 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி, மலைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் தயாா் நிலையில் மருத்துவக் குழுக்களை வைத்திருப்பது, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை

தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், அந்த நாள்களில் பக்தா்களின் வசதிக்காக கோயில் பேருந்துகளுடன் கூடுதல் வாகனங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் க.மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாஸ்கா் பாபு, சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது! -அந்தியூா் எம்எல்ஏ

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என அந்தியூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினா... மேலும் பார்க்க

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்ட... மேலும் பார்க்க

2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்! ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்!

2026 சட்டப் பேரவை தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து வி.சி.சந்திரகுமா... மேலும் பார்க்க

வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு படைத்த சந்திரகுமாா்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தல்களை ஒப்பிடுகையில், இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்... மேலும் பார்க்க