"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
தொப்பூா் கணவாய் சாலையில் லாரி மோதியதில் பெண் பலி; நால்வா் காயம்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண் உயிரிழந்தாா். நால்வா் காயமடைந்தனா் .
தெலங்கானா மாநிலம், ஹதராபாதில் இருந்து, ராஜபாளையத்துக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தருமபுரி வழியாக லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
லாரி தொப்பூா் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையின் இடப்புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரூரை அடுத்த ஓபிலநாயக்கன அள்ளியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி மனைவி செல்வமணி (32) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் காா்த்திக் உள்பட நான்கு பேரை தொப்பூா் போலீஸாா் மற்றும் சுங்கச் சாவடிப் பணியாளா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.