செய்திகள் :

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சுமன் சிங் மனைவி ரேனு தேவிக்கு, மாலதி தேவி என்ற பெண்ணுடன் தன்பாலின உறவு இருந்தது தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உறவு நீடித்து வந்தது. மாலதி தேவி எப்போதும் தனது தோழி ரேனு வீட்டில்தான் இருப்பார். இருவருக்கும் இடையே தன்பாலின உறவு இருப்பது குறித்து தெரிந்தவுடன் சுமன் சிங் குடும்பத்தினர் மாலதி தங்களது வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் மாலதியும், ரேனுவும் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்தனர். இதற்கு ரேனுவின் கணவன் தடையாக இருந்தார். இதையடுத்து சுமன் சிங்கை கொலை செய்ய ரேனுவும், மாலதியும் சேர்ந்து முடிவு செய்தனர்.

இதற்காக ஜிதேந்திரா குப்தா என்பவரை மாலதி தொடர்பு கொண்டு சுமன் சிங்கை கொலை செய்ய பேரம் பேசினார். ரூ.60 ஆயிரத்திற்கு சுமன் சிங்கை கொலை செய்ய ஜிதேந்திரா குப்தா ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று சுமன் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அவரை ஜிதேந்திராவும், அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர் தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் தோட்டத்தில் வைத்து சுமன் சிங்கை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். அதோடு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் ரேனு மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இக்கொலையில் தொடர்பு இருப்பதை ரேனு ஒப்புக்கொண்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜிதேந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரது கூட்டாளி ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேரிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலதிக்கு இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க