செய்திகள் :

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

post image

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனனும் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதயம் முரளி படத்தில்...
இதயம் முரளி படத்தில்...

அதே போல், நடிகர் பகத் பாசிலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். 'இதயம் முரளி'யில் நடித்தது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

அதில் அவர், "'இதயம் முரளி' படத்தில் குட்டி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு தமிழ்ப் பெண்ணாக, மணப்பெண் அலங்காரத்தில் வருகிறேன்.

என் அன்பிற்குரிய காஸ்டியூம் டிசைனர் பல்லவி, 'மாஸ்டர்' திரைப்படத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஒரு படத்திற்காக என்னை இப்படி அழகாகத் தயார் செய்திருக்கிறார்.

இந்த அழகான லுக்கை அவரோடு இணைந்து செய்தது எனக்குள் ஒரு தனி சந்தோஷத்தைத் தந்தது. பகத் பாசிலுடன் இணைந்து ஒரு ஜாலியான சீனில் நடித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.

Fahad Fazil - Malavika Mohanan
Fahad Fazil - Malavika Mohanan

எப்போதுமே 'நாம் இருவரும் ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்' எனப் பேசிக்கொண்டே இருப்போம். இப்போது, இந்தச் சின்ன கேமியோ ரோல் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மூன்றாவதாக, 'இதயம் முரளி' படத்தின் இளமையான மற்றும் கலகலப்பான ஒட்டுமொத்தப் படக்குழுவோடு இணைந்து பணியாற்றியது பயங்கர ஜாலியாக இருந்தது.

அவர்களோடு ஸ்பாட்டில் இருக்கும்போது, ஏதோ மீண்டும் கல்லூரி நாள்களுக்கே திரும்பிப் போனது போன்ற ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தந்தது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

Harshath Khan: "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்க!" - ஹர்ஷத் கான் பேட்டி

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஹர்ஷத் கான் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவார... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி 2: 'இந்த மாதிரி படம்லாம் இப்போ வர்றதே இல்ல'; பாராட்டிய ரஜினி - நெகிழ்ந்த விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் ... மேலும் பார்க்க

Parithabangal: "நான், சுதாகர், டிராவிட் நடிச்ச படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வருவது..." - கோபி

'ஜமா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபா... மேலும் பார்க்க

எழுத்தாளர் சங்க தேர்தல் `அப்ப பாக்யராஜ் சார் அப்படி சொன்னது எங்களுக்கு மனக்காயமாகிடுச்சு'- ரவிமரியா

தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத... மேலும் பார்க்க

Brigida Saga: 'தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே!' - நடிகை பிரிகிடா நிச்சயதார்த்த கிளிக்ஸ்|Photos

``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்..." - பிரிகிடா சகா மேலும் பார்க்க

Vishal: "இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்..." - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?

நடிகர் விஷால் தற்போது இயக்குநராக 'மகுடம்' படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் ... மேலும் பார்க்க