ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த வாரம் அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், அனைவருக்கும் வீடு, 125 நாள்கள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துதல், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற தனியார் உணவகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் கஞ்சா கருப்பு, உணவகத்தைத் திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் கஞ்சா கருப்பு கூறுகையில், "வேங்கை படத்தில் வரும் நகைச்சுவை காட்சியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விட்டதுபோல `குடித்து விட்டு வரும் ஆண்களுக்கும் இலவசமாக பேருந்துகள் விடணும், நாங்க பாட்டுக்கு குடிச்சிட்டு அந்த பேருந்துல ஏறி வீட்டுக்கு போயிடுவோம்' எனப் பேசி நடித்திருப்பேன்.

நான் சொன்னதைத்தான் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்துள்ளார். அதேபோல வீடுகள் கட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனக்கு தான் வீடு இல்லை. எனக்கு முதலில் கொடுங்கள் எனக் கேட்டுள்ளேன்.
நான் படமெடுத்து நிறைய கஷ்டபட்டு விட்டேன் அடுத்த பிறவியில் நான் பாம்பாக பிறந்தாலும் படமெடுக்க மாட்டேன்" என்றார்.



















