செய்திகள் :

நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

post image

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்தக் கோர விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன் மற்றும் 4 வயது பெண் குழந்தை கிரீஷிகா ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்த சஞ்சய் (31), சோனியா (26), சோனியாவின் தாயார் சித்ரா (46) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் (7) என்ற சிறுவன் ஆகிய நால்வரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து
காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

இந்த விபத்தில் மொத்தமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிலிண்டர் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் நாவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 23... மேலும் பார்க்க

யானை - மனித எதிர்கொள்ளல்: வீட்டுக்கு சென்ற வழியில் சிக்கிய நண்பர்கள் - இருவரும் உயிரிழந்த சோகம்

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளல்களின... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து; பயணம் செய்த 7 பேரின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்க... மேலும் பார்க்க

'மதுபோதையில் டிராக்டரை ஓட்டிய நபர்; ஆட்டுமந்தையில் மோதி 81 ஆடுகள் பலி' - திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந... மேலும் பார்க்க