செய்திகள் :

நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

post image

அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

உகாண்டாவில் பிறந்து, இந்தியாவில் வேரூன்றி, குயின்ஸ் மாகாணத்தின் அஸ்டோரியாவில் எளிய வாடகை குடியிருப்பில் வாழ்ந்த இந்த 34 வயது ஜனநாயக சோசலிசவாதி, நகரத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மற்றும் முதல் தெற்காசிய மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

சாதாரண மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்னைகளான வாடகை உயர்வு, வாழ்வாதாரச் செலவு மற்றும் சுகாதாரச் சிக்கல்களை மையமாகக் கொண்ட அவரது தேர்தல் பிரசாரம், அடித்தள மக்களின் நம்பிக்கையை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றி, அரசியல் ஆளுமைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி, உழைக்கும் வர்க்க மக்களின் குரல் மேலோங்குவதை உறுதி செய்துள்ளது.

மம்தானியின் தற்போதைய வாழ்க்கைச் சூழல், அவர் அடுத்து செல்லவிருக்கும் இடத்துடன் முற்றிலும் வேறுபட்டது. அவரும் அவரது மனைவி ரமா துவாஜியும் தற்போது அஸ்டோரியாவில் சுமார் 800 சதுர அடி கொண்ட ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்பில் ஒருநாள் காலை குளியலறை ஒழுகியதால், தரையெங்கும் துண்டுகளைப் பரப்பிய அனுபவத்தை அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த எளிய பின்னணியில், நியூயார்க் மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான, 226 ஆண்டுகள் பழமையான மற்றும் 11,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கிரேசி மாளிகைக்கு (Gracie Mansion) அவர் மாறவுள்ளார்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

ஈஸ்ட் நதி காட்சியுடன், ஃபயர்ப்ளேஸ், பிரமாண்டத் தோட்டம், நிரந்தர சமையல்காரர் போன்ற வசதிகளைக் கொண்ட இந்த மாளிகையில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான மேயர்கள் இங்கு குடியேறுவதே வழக்கம்.

எனினும், தான் எங்கு வசிக்கப் போகிறேன் என்பதை மம்தானி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

மம்தானியின் தேர்தல் பிரசாரம், சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய அடித்தள மக்கள் இயக்கத்தின் (grassroots movement) மூலமாகத் திரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களால் பலப்படுத்தப்பட்டது.

அவரது செய்தி, இந்தி, அரபு மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, நியூயார்க்கின் பன்முக சமூகங்களிடையே ஆழமாக வேரூன்றியது.

தனது இஸ்லாமிய அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டபோதும், உழைக்கும் வர்க்க மக்களுக்காகப் போராடுவதன் மூலம், அவர் நியூயார்க் வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவரது வெற்றி, நியூயார்க் நகரத்தில் அரசியல் சித்தாந்தம் மற்றும் அதிகார மையங்கள் மாறுவதைச் சுட்டிக்காட்டுகிறது.

சிறப்புத் தீவிர திருத்தம்: ”ஜனநாயகத்தைக் கொலை செய்யும் முயற்சி” - கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; "இந்துத்துவா அரசியலைப் புகுத்தும் நடவடிக்கை" - பினராயி விஜயன் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நாடு முழுவதும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் காந்தி கண்டனம் |வீடியோ

மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு பரிமாறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு ஒன்றைப் பதிவிட்டுள... மேலும் பார்க்க