செய்திகள் :

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

post image

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.

இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மருத்துவப் படிப்பிற்காகக் கலந்தாய்விற்கும் விண்ணப்பித்துள்ளார்.

குண்டூர் கிராமத்தில் முதல் மருத்துவ மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளதால் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து நிவேதாவிடம் கேட்கையில், "எனது தந்தையும் தாயும் இருவரும் தினக்கூலியாகவே உள்ளனர். ஒரு நாள் வருமானமே ₹400 ரூபாய்தான் என்பதால் அரசுக் கல்லூரியில் சீட்டு கிடைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளோம்.

எனது பயணம் மிகவும் கடினமாகவே இருந்துள்ளது. நான் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்துள்ளேன்.

நிவேதா
நிவேதா

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை இந்தக் கிராமத்தில் மின்சார வசதியே இல்லை. கடந்த இரண்டு மாதங்களாகத்தான் எனது கிராமத்திற்கு பேருந்து வசதி கிடைத்துள்ளது.

இப்போது வரை இங்கு தொலைபேசி சிக்னல் சுத்தமாகக் கிடையாது. மேலும், நான் நீட் பயிற்சிக்காக தினமும் மலை இறங்கி 30 கிலோமீட்டர் பயணம் செய்துதான் பயிற்சி எடுத்து வந்துள்ளேன்.

எனக்கு யூனிட்டி ஆஃப் யூத் என்ற அமைப்பும், அதன் தலைவரான விஜய் என்பவரும் உதவிகள் செய்துள்ளார்கள். எனது கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது கனவும் லட்சியம்" என்று கூறியுள்ளார்.

அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்திலிருந்து வெளியே வந்து தனது அடையாளத்தைப் பதிவு செய்துள்ள இவரைப் பொதுமக்களும் தன்னார்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

திறன் மேம்பாடு டு சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு!

இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில் (Logistics Sector Skill Council - LSC), ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள BBW Hoch... மேலும் பார்க்க

2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்!

வெராண்டா லெர்னிங் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறைக்கான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவான வெராண்டா பையர், 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்காக சிறப்ப... மேலும் பார்க்க

"பள்ளி முதல் கல்லூரி வரை" - மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களின் அறக்கட்டளை

அமெரிக்க வாழ் தமிழர்களால் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’, தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உன்னத நோக்குடன் செயல்பட்டு... மேலும் பார்க்க

ஒடிசா: 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்; வலுக்கும் கண்டங்கள்!

ஒடிசா மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் பிரபலமான 'நிம்புடா நிம்புடா' பாடல் இடம்பெற... மேலும் பார்க்க

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.தமிழ்நாட... மேலும் பார்க்க

குரூப் 1: வெறும் 26 பணியிடங்களை அறிவித்த TNPSC; தேர்வர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன?

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலா... மேலும் பார்க்க