செய்திகள் :

நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத் குமார்?

post image

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சம்பத் குமார் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.  சார்பில் போட்டியிட்ட அவர், 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று, 21 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய பலம் வாய்ந்த வேட்பாளர்களை வீழ்த்தி, சம்பத் குமார் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

சம்பத் குமார்
சம்பத் குமார்

கோவை கணபதி பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (47), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்த இவர், த.வெ.க-வில் கோவை மாநகர மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக நடந்த த.வெ.க-வின் மேற்கு மண்டல பூத் முகவர் கூட்டம் கோவையில் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த சம்பத்குமார், கோவை மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளில் முக்கியமானவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட த.வெ.க. அமைச்சரவையில் சம்பத்குமாருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவருக்கு, எந்த துறை ஒதுக்கப்படும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார் இந்த வினோத்?

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து 30 வருடங்களாக திமுக வசம் இருந்தது. இதனால் கும்பகோணத்தை திமுக-வின் கோட்டை என்றே சொல்லி வந்தனர். திமுக-வைச் சேர்ந்த சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து மூன்று முறை எம்.எ... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவை: சென்னைக்கு 6, நாமக்கலுக்கு 3, கோவைக்கு.? - மாவட்ட வாரியாக அமைச்சர்கள் விவரம்

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் தவெக தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப்பிரமாணம் ... மேலும் பார்க்க

கோவையில் தவெக-வின் முதல் வெற்றியை பதிவு செய்த ரசிகர் மன்ற நிர்வாகி - அமைச்சரான விக்னேஷ் பின்னணி!

கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெ... மேலும் பார்க்க

கேலிச்சித்திரச் சர்ச்சை: மாறிவரும் உலக ஒழுங்கும், மேற்கத்திய நாடுகளிடம் மாறாத இந்திய பிம்பமும்!

நார்வே பயணமும் - கார்ட்டூனும்!மேற்கத்திய ஊடகங்களில் இந்தியாவைக் குறித்த ஸ்டீரியோடைப் மற்றும் இனவெறிச் சித்தரிப்புகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்தியப் பிரதமர் மோடியின் நார்வ... மேலும் பார்க்க

TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பா.ஜ.க - வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் த‌.வெ.க வேட்பாளர் கமலி. தி.மு.க- வின் இளம் வேட்பாளரான மருத்துவர் கோகிலா ... மேலும் பார்க்க

'விஜய்யின் அமைச்சரவையில் 7 தலித் எம்.எல்.ஏக்களுக்கு இடம்!' - முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 23 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். இந்நிலையில், தவெக அரசு சார்பில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க