செய்திகள் :

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

post image

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகளான சிவமதி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சிவமதியும் பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

பேட்டை காவல் நிலையம்

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உறவுக்காரின் மகன் ஒருவரை சிவமதிக்கு திருமணம் செய்து வைக்க முயன்றபோது சிவமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், வேறு வழியின்றி ஆனந்த கிருஷ்ணனுக்கே திருமணம் செய்து வைப்பதாகக் கூறி உறுதியளித்ததுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது.  

இவர்களது திருமணம், வரும் 6-ம் தேதி தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள சிவகாமி அம்பாள் – சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவமதியின் உறவினர்கள் அவரது பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (1-ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பேட்டை காவல் நிலையம்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய போலீஸார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிவமதியை ஆணவப்படுகொலை செய்ததாக ஆனந்தகிருஷ்ணனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவமதியின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க