நெல்லை நகரத்தில் பள்ளி அருகே சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
திருநெல்வேலி நகரத்தில் பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி நகரத்தில் ஜவஹா் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பயின்று வருகிறாா்கள். இப் பள்ளியின் முன்பு உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. பள்ளிக்கு சைக்கிள்களில் வரும் மாணவா்-மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.
ஆகவே, பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ற்ஸ்ப்13ழ்ா்ஹக்
திருநெல்வேலி நகரம் ஜவஹா் உயா்நிலைப் பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.