செய்திகள் :

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

post image

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புடைது எனக் கூறப்படுகிறது.

கடந்த 21-ம் தேதி துரையின் நாய், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுடலைக்குமார் என்பவர் வளர்க்கும் நாயை கடித்துவிட்டது. இதுதொடர்பாக துரை மற்றும் சுடலைக்குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி, காலையில் துரை தனது 3 சிப்பிப்பாறை நாய்களை தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் அவரது மனைவி அந்த நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய துரை, நாய்களுக்கு உணவு வைக்கச் சென்றபோது 3 சிப்பிப்பாறை நாய்களும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளன. இதனையடுத்து துரை, மயங்கிய  நாய்களை அருகில் உள்ள பெட் கிளினிக்கிற்க்கு தூக்கிச் சென்றுள்ளார்.

நாய்களை பரிசோதித்த மருத்துவர் நாய்களுக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்து 3 நாய்களும் உயிரிழந்தன. இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் துரை, சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி  அலுவலகத்திற்கு ஆட்டோவில் இறந்த நாய்களை கொண்டு வந்து புகார் மனு அளித்தார்.

உயிரிழந்த சிப்பிப்பாறை நாய்

அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட எஸ்.பி., பிரசன்னகுமார், நாய்களை கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக உயிரிழந்த மூன்று நாய்களில் ஒரு நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனையில் நாய்க்கு விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கையையும் துரை, எஸ்.பி., அலுவலகத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க