LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
'பங்காளியும் அடி வாங்குறான் மாப்ள...' - குஷியில் CSK ரசிகர்கள் - மும்பை சரிந்தது எப்படி?
கஷ்ட காலம் தனியா வராது, ஒன்றுக்குப் பின் ஒன்னாவும் வராது, ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்கிட்டு நம்மள ஒன்றுக்குமே இல்லாம ஆக்க வரும். இதுக்கு உதாரணம் கேட்டீங்கன்னா ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் தரப்பும் ராஜஸ்தான் ராயல்ஸோட ஜெய்ஸ்வால் - சூர்யவன்சி இணையைக் கை காட்டும்.
3.2 ஓவர்கள்தான் பவர்பிளேனு சொன்னத அவ்ளோ ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ருச்சு போலனு தப்பா நினைச்சுட்டாங்க போல ரெண்டுபேரும். மேட்ச் டிராவாகி சூப்பர் ஓவர்ல ஆட வந்தவங்க மாதிரி பந்த பார்சல் பண்ணி பவுண்டரி லைன் பக்கம் அனுப்பிட்டே இருந்தாங்க. பந்து எப்போ நம்ம தலைல விழுமோன்ற பதட்டத்துல பார்வையாளர்கள் கண்ல உயிர்பயம் தெரிஞ்சுடுச்சு.

முதல் ஓவர் போட வந்த தீபக் சாஹருக்கு, வெல்கம் டிரிங்க்ஸ் கொடுத்த மாதிரி ஜெய்ஸ்வால் தந்த வரவேற்பு இருக்கே... அட அட அட! "தம்பி சாஹர், நீங்க ஸ்விங் பண்ணுவீங்கனு தெரியும், ஆனா நான் உங்களை ஸ்லிங் ஷாட்ல வச்சு அடிக்கப்போறேன்னு உங்களுக்குத் தெரியுமா?????"னு முதல் ஓவர்லயே 22 ரன். சாஹர் முகம் பாவம், "ஏன்டா மழையில நனைஞ்சது பத்தாதுனு, இப்போ ரன்மழைல வேற மைதானத்த நனைய விடுறீங்களே?"னு சொல்ற மாதிரி இருந்துச்சு!
மாஸ்டர் வெர்ஸஸ் கிளாஸ் லீடர் சண்டை அதாங்க பும்ரா - சூர்யவன்சி ஃபைட் சீனுக்குத்தான் எல்லோரும் வெய்டிங். ஆனா அந்த சீனே இல்லனு, பும்ரா வீசின முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்கிட்டாரு சின்ன தளபதி சூர்யவன்சி. பும்ராவையாச்சும் சீனியர் அண்ணானு கொஞ்சமாச்சும் விட்டு வச்சாரு. போல்ட், சர்துல் தாக்கூருக்கு எல்லாம் தர்ம அடி விழுந்துச்சு. எப்போவோ பெஞ்ச மழை இப்போ பெய்யக் கூடாதானு மும்பை தரப்பு அழாத குறைதான்.
பந்து ஈரமா இருந்ததுனால, மும்பை பந்துவீச்சாளர்கள் கையில பந்து நிக்கவே இல்லை. எண்ணெய் தடவி குளிப்பாட்டுன பூரிக்கட்டை மாதிரி பந்து நழுவிநழுவி ஓடிக்கிட்டே இருந்துச்சு. மும்பை ஃபீல்டர்கள் பந்தத் துரத்துறது கோழி பிடிக்குறது மாதிரி இருந்தது, பந்து அவங்களுக்கு "டாட்டா" காட்டிட்டு பவுண்டரிக்கு ஓடிட்டே இருந்தது. முதல் மூன்று ஓவர்கள்ல லைன் அண்ட் லெந்த் ரெண்டுமே பாலோட சமாதானமா போகல.
விளைவு, பௌலர்கள எல்லாம் பஞ்ச் பேக்களாக மாற்றி விளையாடிட்டு இருந்தாங்க ஜெய்ஸ்வாலும் சூர்யவன்சியும். பவர்பிளேவான 3.2 ஓவர்கள்ல 59 ரன்கள், ஜெய்ஸ்வால் 32 பந்துகள்ல 77 ரன்கள்ன்றது எல்லாம் பராக்குக்குக் தானே அசாம் சொந்த ஊரு, ஏதோ ஹோம் பிட்ச்ல ஆடுற மாதிரி நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படி ஆடுறீங்கன்னு கேட்க வச்சது. அணி அடிச்சதுல 78 சதவிகிதம் ரன்கள் இந்த ரெட்டைக்குழல் துப்பாக்கில இருந்து வந்ததுதான்.

கடைசில 11 ஓவர்ல 150 ரன்! மும்பை பௌலர்ஸ் டிரஸ்ஸிங் ரூம்ல உக்காந்து "அடுத்த தடவை மேகமூட்டமா இருந்தாலே லீவ் போட்டுடலாம்"னு பேசிட்டு இருந்ததா ஒரு செய்தி......
பீஸ்ட் மோடுக்கு மும்பையோட மொத்த பேட்டிங்கும் மாறனும் இல்லாட்டி பொல்லார்ட் திரும்ப வந்து ஒரு கை கொடுக்கனும். அப்போதான் இந்த ரன்கள அடிக்க முடியும்ன்ற நிலை. ஏன்னா 11 ஓவர் மேட்ச்ல 151 ரன் டார்கெட்ங்கறது கிரிக்கெட் இல்ல, அது ஒரு "மிஷன் இம்பாசிபிள்". மும்பை இந்தியன்ஸ் அந்த இலக்கைத் துரத்தப் போய், கடைசியில 11 ஓவர்ல 123/9 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்துல தோத்துட்டாங்க. ஒரே ஆறுதல் கிட்டத்தட்ட நெருங்கிட்டோம்லனு கொஞ்சமா பெருமைபட்டுக்கலாம்.
பவர்ஹிட்டர்களின் பவர் ஹவுஸான மும்பை இந்தியன்ஸோட இன்னிங்க்ஸும் அமர்க்களமா இருக்கும்னு பார்த்தா, முதல் ஓவர்லயே ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சுல ரயான் ரிக்கல்டன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாரு. சூர்யகுமார் யாதவ் கடமை மற்றும் வழமை தவறாம ஒரு சிக்ஸர் அடிச்சுட்டு அதே ஓவர்லயே அவுட். அப்புறம் நம்ம "ஹிட்மேன்" ரோஹித் சர்மா வந்த வேகத்துல வெறும் 5 ரன்கள்ல சந்தீப் சர்மா கிட்ட எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் பக்கம் நடையைக் கட்டினாரு.

சந்தீப் சர்மாவுக்கு ரோஹித் விக்கெட்டை எடுக்குறது என்னவோ `அல்வா' சாப்பிடுற மாதிரி ஆகிடுச்சு, இதுவரை ஐபிஎல்ல மட்டுமே ஆறுமுறை நடந்துடுச்சு. மூன்று ஒவர்கள் முடிவுல ராஜஸ்தான் ராயல்ஸ் 58/0 னு இருந்தாங்க, மும்பை இந்தியன்ஸ் தேர்தல்ல டெபாசிட்டே காலியான சுயேட்சை வேட்பாளர் மாதிரி 25/3னு கதிகலங்கி நின்னாங்க. ராஜஸ்தானோட ரெண்டு பாயிண்ட்ஸ் அப்போவே அவங்க அக்கவுண்ட்ல போய்டுச்சு.
கேப்டன் ஹர்திக் பாண்டியா (9 ரன்கள்) மற்றும் திலக் வர்மா (14 ரன்கள்) ரெண்டு பேரும் ரவி பிஷ்னோய் வீசுன ஒரே ஓவர்ல அவுட் ஆகி மொத்த மேட்சையும் ராஜஸ்தான் பக்கம் தாரை வார்த்துட்டாங்க. ஆக மும்பையோட டாப் - 5ல நாலு பேர் ரெட்டை இலக்க எண் வந்தா சாமி குத்தம் ஆகிடும்ன்ற மாதிரி சிங்கிள் டிஜிட்ல வெளியேறிட்டாங்க.
அடுத்து வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், நாமன் தீர் இணை மட்டும் தான் 17 பந்துகள்ல 47 ரன்களை சேர்த்திருந்தாங்க. இல்லாட்டி மும்பை இந்தியன்ஸோட ரன்ரேட் மரண அடி வாங்கி இருக்கும். ஏன்னா டாப் - 5க்கு அடுத்து வந்த நான்கு பேட்ஸ்மேன்கள் கூட சிங்கிள் டிஜிட்ல தான் அடிச்சிருந்தாங்க. ஆக இறுதி ஓவர்கள் வரை ஆல்அவுட் ஆகாம இருந்தாலே ஆச்சரியம்ன்றதுதான் நிலைமை. கொடுக்கப்பட்ட 11 ஓவர்கள்ல 123 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இருக்கு மும்பை.

ஹாட்ரிக் வெற்றிகளோட டேபிள் டாப்பரா ஜம்முனு ராஜஸ்தான் ராயல்ஸ் உட்கார்ந்திருக்க, மும்பை அடுத்தடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் கூட தோத்ததுக்கான காரணங்களை தேடிட்டு இருக்கு. ஆர்சிபிகூட ஆடப்போற அடுத்த போட்டி அதிமுக்கியமானதாக இருக்கும்.





















