செய்திகள் :

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

post image

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ’கற்பகத்தரு’ எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் 'உடன்குடி கருப்பட்டிக்கு' மத்திய அரசின் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

கருப்பட்டி

இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலில் ஈடுபட்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகச் சீனி (சர்க்கரை) கலந்து கருப்பட்டி அல்லது கற்கண்டு தயாரித்தால் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதாக  திருநெல்வேலி ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் ரூ.5 கோடி அளவிற்குச் சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனியைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி எனக்கூறி ரூ.6 கோடி வரை விற்பனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

கருப்பட்டி

சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18%  ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்குப் பதிலாக, அசல் கருப்பட்டி எனப் பொய் கூறி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக உடன்குடியைச் சேர்ந்த 5 வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடை... மேலும் பார்க்க

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இர... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் ப... மேலும் பார்க்க

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க