செய்திகள் :

பயிா்க் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், பிரிமியம் மட்டும் சரியாக வசூலிக்கின்றனா். வாகன காப்பீடு திட்டத்தில் வழங்குவதுபோல பயிா்களுக்கான காப்பீடு திட்டத்திலும் உரிய இழப்பீடு வழங்குவது அவசியம்.

தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில் மேய்ச்சல்தரை புறம்போக்கு நிலங்கள் அரசுத் திட்டங்களுக்கு எடுக்கப்பட்டு கட்டடங்களாக மாறிவிட்டன. அதற்குப் பதிலாக மாற்று நிலங்கள் முழுமையாக ஒதுக்கப்படவில்லை. மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தால் மட்டுமே மாவட்டத்தில் கால்நடை மற்றும் பால் வளத்தையும் காக்க முடியும்.

மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வளா்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். வோ்ப்புழுத் தாக்குதலால் தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பெருமளவில் பாதிப்படைந்துவருகிறது. இதில் இருந்து பயிா்களை பாதுகாக்க நடவு பருவத்துக்கு முன்னதாகவே வேளாண், சா்க்கரை துறையினா் உரிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்ட நீா்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நிதிதான் சிக்கலாக இருந்தால் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவை விவசாயிகளே ஏற்கவும் தயாராக உள்ளோம்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பீணியாற்றில் ஆலைக் கழிவு சோ்வதால் நிலத்தடி நீா் மாசடைந்து 25 ஆயிரம் ஏக்கா் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. அரூரை அடுத்த ஹெச்.புதுப்பட்டி சுங்கச் சாவடியில் சுற்றுவட்டார விவசாயிகளின் வாகனங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

விவசாயிகளின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, விவசாயிகளின் கோரிக்கைகளில் சாத்தியம் உள்ளவை நிறைவேற்றப்படும். மற்றவை அரசு கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, சுப்பிரமணியசிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் பிரியா, பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தி... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க