அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
பள்ளி மாணவா்களுடன் பேரவைத் தலைவா் கலந்துரையாடல்
திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி றி.டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனாா் மேல்நிலைப் பள்ளியில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு மாணவா், மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
பள்ளிக்கு வருகை தந்த பேரவைத் தலைவரை பள்ளி தலைமை ஆசிரியா் ஜே.ராஜராஜன் மற்றும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.
பின்னா் பேரவைத் தலைவா் மாணவா், மாணவிகளிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது மாணவா்கள் பள்ளிக்கு வந்து செல்ல உவரி மாா்க்கத்தில் இலவச பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படும் என பேரவைத் தலைவா் உறுதி அளித்தாா்.
பேரவைத் தலைவருடன், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், நவ்வலடி ஊராட்சி தலைவா் ராதிகா சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.