செய்திகள் :

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

post image

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், " நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் காலை 10.30 மணிக்கு நான் காவல் நிலையம் சென்றேன். விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்." என தெரிவிக்கப்பட்டது.

பழனி
பழனி

அரசுத் தரப்பில், " குறிப்பிட்ட இடம் பழனி மடத்திற்கு சொந்தமானது. அதனை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்பது தொடர்பான குறிப்புகள் இருந்தும் எப்படி பதிவு செய்தார்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "பொறுப்பு பதிவாளராக சென்றதால் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது" என தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுக (EXIM) வர்த்தகம் - பிரத்யேக புகைப்படங்கள்!

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் (EXIM) வர்த்தகம்.! பிரத்யேக புகைப்படங்கள்.! மேலும் பார்க்க

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்ந... மேலும் பார்க்க

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க