செய்திகள் :

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

post image

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 'உங்க விஜய்... உங்க விஜய்... உயிரென வரவா' என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, "இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன" என்றனர்.

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க