செய்திகள் :

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

post image

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் என இரண்டு பேருமே அந்தத் தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள்.

அங்கு தங்களுக்கு சீட்டை உறுதி செய்வதற்கு 2 பேரும் செய்து வரும் அதிரடி மூவ்கள், அவர்களுக்கு சீட் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக 2 கட்சிகளில் எழுந்துள்ள கலகக் குரல் ஆகியவற்றால் வடக்கு தொகுதி அதிரி புதிரி ஆகிக் கொண்டிருக்கிறது.

சந்திரசேகர்

கோவை அதிமுகவினரிடம் பேசினோம், `சந்திரசேகர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே வடக்கு தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அப்போது எங்கள் கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி உறுதி செய்யப்பட்டது.

அதனால் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன், வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். சந்திரசேகருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்திரசேகர் அதிருப்தியானார். கடந்த 2025 ஏப்ரல் மாதம் கட்சியை விட்டு விலகிய அவர், மீண்டும்  கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் சேர்ந்தார்.

இந்தமுறை எப்படியாவது சீட்டை உறுதி செய்ய களத்தில் வேகம் காட்டுகிறார். கட்சிக்காரர்களுக்கு கறி விருந்து கொடுப்பது, தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று ஆக்டிவாக உள்ளார். ஆனால் ஏராளமான புகார்கள் எழுந்ததால் வேலுமணிக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. எனவே அவருக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

சந்திரசேகர்

தனது பண பலத்தையும், பாஜகவில் வானதிக்கு இங்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்று லாபி செய்யும் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு லாபி செய்து வருகிறார். பிரசார வாகனத்தை கூட புக் செய்துவிட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த காலங்களில் கட்சி பணி செய்யாதவருக்கு, கட்சி எப்படி வாய்ப்பு வழங்க முடியும்" என்றனர்.

கோவை பாஜகவினரிடம் பேசியபோது, "கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், இந்தமுறை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவில் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் வடக்கு தொகுதியில் தான் அதிகம் வலம் வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையின்போது அங்குள்ள சக்தி கேந்திர நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அவருக்கு நெருக்கமானவர்கள் தான் தொகுதி பொறுப்பாளர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணியிடம் பேசி வடக்கு தொகுதியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். ஆனால் இந்தத் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பாக உள்ளனர்.

வடக்கு தொகுதியை குறிவைத்து பலர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள். வானதி சீனிவாசன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தெற்கு தொகுதியில் பணியாற்றிவிட்டு, தற்போது அங்கு வெற்றி வாய்ப்பு குறைகிறது என்பதற்காக வடக்கு தொகுதிக்கு மாறுவதை ஏற்க முடியாது. இன்றைய தினம் கூட நயினார் நாகேந்திரனை வடக்கு தொகுதிக்கு அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

வானதி சீனிவாசன்

கோவை மாவட்டத்தின் இதய பகுதியே தெற்கு தொகுதி தான். கோவையில் பாஜக வலுவாக இருக்க அந்தத் தொகுதி முக்கியம். கட்சி நலனை யோசிக்காமல், நிர்வாகிகளின் வசதிக்காக தொகுதி மாறுவதை கட்சி மேலிடம் அனுமதிக்க கூடாது" என்றனர்.

ஆக இருவரில் யாருக்கு சீட் வழங்கினாலும் உள்கட்சி பூசல் வெடித்து தேர்தலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தற்போதைய கள நிலவரம் உணர்த்துகிறது. அதனை சரிகட்டும் பொறுப்பும் தற்போது கட்சி தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க