செய்திகள் :

’பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் அந்த இருவர் யார் யார்?

post image

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் சூழலில், இந்த வருடம் புது முயற்சியாக ’பிக்பாஸ் காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்கள் பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சியில் பெர்ஃபார்மன்ஸை பொறுத்து அவர்களில் சிலர் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக அனுப்பப் படவிருக்கிறார்கள்.

பிக் பாஸ் காமன் மேனுக்கான புரமோ சில தினங்களுக்கு முன் வெளியானது நினைவிருக்கலாம். புரொமோவில் விஜய் சேதுபதி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது அவரில்லை என்கிறார்கள்.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

தற்போது ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் ஒளிபரப்பு தொடங்கவிருக்கும் பிக் பாஸ் காமன் மேன் ஷோ சுமார் இருபத்தைந்து எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் இந்த காமன் மேன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க தொகுப்பாளரைத் தேடும் பணியை முடுக்கி விட்டிருந்த தயாரிப்புத் தரப்பு தற்போது தொகுப்பாளரை டிக் செய்து விட்டதாகத் தெரிய வருகிறது.

Bigg Boss 7 Maya

நமக்குக் கிடைத்த தகவல் படி பிக்பாஸ் 7வது சீசனில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டு கவனம் ஈர்த்த மாயா, 8வது சீசனில் டைட்டில் வென்ற முத்துக்குமரன் இரண்டு பேருமே டிக் லிஸ்டில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே தொகுத்து வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

நிகழ்ச்சியில் புரொமோ வெளியாகிற போது இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகுமென்கிறார்கள்.!

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயார... மேலும் பார்க்க

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி... மேலும் பார்க்க