செய்திகள் :

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்தும் பேசிய தமிழிசை சௌந்தராஜன், "விசிக, திமுக, கம்யூனிஸ்டுகள் எல்லோரும் அவர்கள் கையை வைத்தே குத்திக்கொள்கிறார்கள்.

விசிக, பாஜகவை இணைத்து, இணைத்து பேசித்தான் அரசியல் செய்தார்கள். திருமா விஜய்யை கொள்கை எதிரி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு
சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு

ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று விஜய்யைச் சொன்னார். ஆனால் இன்று அவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள்.

அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே அரசவையில் பங்கு கொண்டது பிடிக்கவில்லை. அதுவும் திருமாவளவனே சொல்கிறார் எனக்கே பிடிக்கவில்லை என்று... அப்படி ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது தானே...

இந்த அரசாங்கம் தினமும் ஆட்டம் காண்கிற அரசாங்கமாகத்தான் இருக்கபோகிறதோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. மாணிக்கம் தாகூருக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.

உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சராவதற்கு உலகம் இருக்கும் வரை வாய்ப்பில்லை. திமுக தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாகச் சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க

தென்காசி: காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ். 68 வயது நிரம்பிய விவசாயியான அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டி வருகிறார். அந... மேலும் பார்க்க

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் ம... மேலும் பார்க்க

செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்தது ஏ.ஐ. வீடியோவா? – நடந்தது என்ன?

கோவையில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பந்தய சாலை பகுதியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யபார... மேலும் பார்க்க

ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

சத்தீஷ்கர் மாநிலத்தில், மாநில அரசு முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பெற வங்கிகள் பல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள சுர்குஜா ம... மேலும் பார்க்க

'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்காலில் ட்ரம்ப்

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை' கொண்டாடும் நிகழ்ச்சி ஒன... மேலும் பார்க்க