"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை
பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில், 121 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
வைஷாலி, பச்வாரா, ராஜபக்கர், பிஹார் ஷரிப் மற்றும் பெல்தெளர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ கட்சிகளின் வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.

இதுதவிர 73 தொகுதிகளில் ஆர்.ஜே.டி. வேட்பாளர்களும், 24 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், CPIML வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சிபிஐ வேட்பாளர்கள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
என்.டி.ஏ. கூட்டணியில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 57 இடங்களிலும், பாஜக 48 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி14 இடங்களிலும் களம் காண்கின்றன.
முசாபர்பூர் மற்றும் குர்ஹானி தொகுதிகளில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போரே, பர்பட்டா, அலாவுலி தொகுதிகளில் தலா 5 பேர் மட்டுமே களமிறங்குகின்றனர்.
இந்த வேட்பாளர்களில் நட்சத்திர வேட்பாளர்களாக முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் ரகோபூர், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவின் மகுவா, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராபூர், விஜய்குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய், பாடகி மைதிலி தாக்குர் போட்டியிடும் அலி நகர் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
















