செய்திகள் :

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

post image

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.

முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசாத் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு நோயாளிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனையில் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினர் 3.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். தீப்பிடித்துக்கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''நாங்கள் 15-20 நோயாளிகளை ஐசியூவில் இருந்து மீட்டோம், அதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை"என்று கூறினார்.

இத்தீவிபத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீவிபத்தில் இருந்து மீட்கப்ப்பட்ட 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நீதிபதி சுப்ரத் குமார் தெரிவித்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்த... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க