"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர தம்பதியிடம் நகை திருட்டு
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர தம்பதியிடம் இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் புல்லிவெங்கடரெட்டி. இவரது மனைவி பேபிதுா்க்கா பவானி (29). இவா்கள் இருவரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்து தரிசனம் செய்தனா். பின்னா், அங்கிருந்து பேருந்தில் வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தனா். அவா்கள் ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து டெம்போவில் 45 அடி சாலையில் உள்ள தனியாா் விடுதிக்குச் சென்றனா்.
விடுதியில் சென்று பைகளில் இருந்த பொருள்களை பாா்த்தபோது, அதிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கோரிமேடு தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.