செய்திகள் :

`புருவம் த்ரெட்டிங் முதல் கூட்டுப்புருவம் வரை' - அழகுக்கலை நிபுணர் டிப்ஸ்

post image

''பியூட்டி பார்லர் பக்கமெல்லாம் நான் போறதே இல்லப்பா...' என்று சொல்லும் பெண்கள்கூட, கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.

இதற்கு டீன் ஏஜ்,. மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என்று எந்த ஏஜும் விதிவிலக்கல்ல'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, இங்கே த்ரெட்டிங் தொடர்பான டிப்ஸ் வழங்குகிறார்.

புருவம் த்ரெட்டிங்
புருவம் த்ரெட்டிங்

’’டீன் ஏஜ் காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசுபுசுவென காடு போல் முடி வளர்வது இயற்கையே. ஆனால், 'அழகாக இல்லையே' என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும்போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் - குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். அந்த வயதில், இயற்கைக்கு முரணாக உடம்பில் நாம் செய்யும் மாற்றங்கள் பூமராங் ஆகி, வேறுவிதமான சிக்கல்களுக்கு நிரந்தர விதை போட்டுவிடும்!

புருவம் த்ரெட்டிங்
புருவம் த்ரெட்டிங்

'த்ரெட்டிங்' என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பி போல் திக்காக வளர ஆரம்பித்து விடும். அதுமட்டுமல்ல... ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால்... புருவங்களிலிருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி... நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுறுத்தும்.

'எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாம இருக்க முடியலையே...!' என்பவர்களுக்கு... இதோ சில டிப்ஸ்கள்!

புருவம் த்ரெட்டிங்
புருவம் த்ரெட்டிங்

த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்... புருவம் வில் போல் அழகான வடிவத்துக்கு மாறிவிடும்.

த்ரெட்டிங் செய்து கொள்ளும்போது தசையெல்லாம் சுருங்கக்கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன்முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும், வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஒரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களையும் அழகாகக் காட்டும்.

சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடி சேர்ந்து 'கூட்டுப் புருவம்' என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற... கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகிய வற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்டாக்குங்கள். இதை மூக்கின் நுனி பகுதியில் இருந்து புருவம் வரை ‘திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென பிரகாசமாக தெரியும்’’ என்கிறார் ராஜம் முரளி.

சருமம் முதல் தாடி, மீசை பராமரிப்பு வரை; டீன் ஏஜ் பாய்ஸ்‌க்கு பியூட்டி டிப்ஸ்!

டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி. உணவு டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ்பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வக... மேலும் பார்க்க

முகப்பரு தழும்பு முதல் சொரசொர மூக்கு வரை; சரி செய்யும் புதினா பியூட்டி டிப்ஸ்!

‘‘எல்லா பருவநிலைகளிலும் கிடைக்கக் கூடியது, புதினா. இது உடலுக்குத் தரவல்ல நன்மைகள் பல. குறிப்பாக, வாய்க்கும் வயிற்றுக்கும். கூடவே, அழகையும் மெருகூட்டவல்ல பல அம்சங்கள் நிறைந்தது’’ என்று சொல்லும் அழகுக் ... மேலும் பார்க்க

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம்!

‘‘தன் பூ, கனி, உள்ளிருக்கும் முத்துக்கள் என்று அனைத்திலும் அழகு மிளிரும் மாதுளையை ஓர் அழகுராணி’’ எனும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மாதுளையை கொண்டு செய்யப்படும் அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார்... மேலும் பார்க்க

Health: கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை; செலவில்லா அழகுக்குறிப்புகள்!

கேரட்... கரோட்டின் மற்றும் விட்டமின் `ஏ' சத்து நிறைந்தது. விட்டமின் `ஏ', கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், ... மேலும் பார்க்க

தயிர் முதல் அருகம்புல் சாறு வரை பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்!

வயது வித்தியாசமில்லாமல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைபோகிற ஒரு பிரச்னை பொடுகுதான். பொடுகு ஏன் ஏற்படுகிறது, இதற்கான வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் ஏதும் உள்ளதா என சொல்கிறார் சித்த மருத்துவர் முக... மேலும் பார்க்க