செய்திகள் :

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி

post image

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பயணிகள், ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது சூட்கேஸிக்குள் ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத வகையில் இருந்தது. அதனால் ரயில்வே போலீஸாரும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் சடலம்
சடலம்

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``இன்று (5/6/2026) காலை சுமார் 7.15 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து தலைமையிலான போலீஸார், அந்த சூட்கேஸை மீட்டனர். சூட்கேஸிக்குள் ஆண் சடலம் மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும், சூட்கேஸில் இருந்து ரத்தம் கசிந்த தடயங்கள் எதுவும் இல்லை. அதனால் வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வந்து சூட்கேஸை போட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். அதனால், சூட்கேஸை இங்கு போட்டது யார் என்று சி.சி.டி.வி மூலம் ஆய்வு செய்து வருகிறோம். காணாமல் போனவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

உறவை புதுப்பிக்க மறுப்பு; மாஜி காதலியை அலுவலகத்திற்குள் ஓடஓட விரட்டி 20 முறை குத்திக்கொன்ற வாலிபர்

காதல் தோல்விகள் சில நேரங்களில் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் கொலை போன்ற கொடூர செயல்களில் இறங்கி விடுகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை அலுவலகத்திற்குள் புகுந்து ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் ... மேலும் பார்க்க

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரி... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை? டிரைவரைத் தாக்கிய உறவினர்கள்! - என்ன நடந்தது?

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அபோது, அந்தப் பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத... மேலும் பார்க்க

"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர்... மேலும் பார்க்க