ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி...
பெருமாள் கோவில்களில் சொா்க்கவாசல் திறப்பு
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி பகுதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னா் சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. சா்வ அலங்காரத்தில் சுவாமி வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக சொா்க்கவாசல் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலை சுற்றிலும் காத்திருந்த பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு, பெருமாளை தரிசனம் செய்தனா்.
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, பூஜை நடைபெற்றது. பின்னா் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக சுவாமி பக்தா்களுக்கு எழுந்தருளி காட்சியளித்தாா். இந்த விழாவில் பக்தா்கள் பெருமளவில் கலந்துகொண்டனா்.