செய்திகள் :

"பேஸ்புக் காதலனோடு வாழ விரும்புகிறேன்" - சேர்த்து வைத்த கணவன்; உத்தரப்பிரதேசத்தில் நடந்த சுவாரஸ்யம்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவர் முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்த சோனி அடிக்கடி பேஸ்புக்கில் மூழ்கி இருந்தார். இதில் அவருக்கு ஹரீஷ் (21) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் காதலனைத் தேடி சோனி அடிக்கடி காதலன் இருக்கும் இடத்திற்கே செல்ல ஆரம்பித்தார்.

அப்படி மூன்று முறை தனது கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு காதலனைத் தேடிப் போனார். ஒவ்வொரு முறையும் காதலன் பேசி திரும்ப அனுப்பி வைத்தார். ஆனால் நான்காவது முறை மீண்டும் சோனி, காதலனைத் தேடி ஓடிப்போனார். இம்முறைதான் கணவன் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று சோனி பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் இப்பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றது.

திருமணம்
திருமணம்

இது குறித்து சோனி மற்றும் அவரது கணவன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் வாக்குவாதம் செய்தனர். குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி குடும்பத்தினர் சோனியிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், சோனி தான் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என்றும், கணவன் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்றும் பிடிவாதமாகக் கூறினார். இதையடுத்து, "அவர் விருப்பப்படியே அவரது காதலனுடன் வாழட்டும்" என்று பீரு தெரிவித்து விட்டார்.

இது குறித்து பீரு கூறுகையில், ''என்னுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லையெனில், அவர் விரும்பும் நபருடன் வாழட்டும்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருவரிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். அன்று மாலையே சோனி அங்குள்ள கோயில் ஒன்றில் தனது பேஸ்புக் காதலனைத் திருமணம் செய்து கொண்டார். சோனியின் கணவன் தனது குழந்தைகளை வளர்த்துக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டார்.

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பிஷ்னோய் கூட்டாளி!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ம... மேலும் பார்க்க

`ரூ.70,000 கோடி விற்பனையை மறைத்த பிரியாணி உணவகங்கள்' - ஐதராபாத் கடை ரெய்டு மூலம் அம்பலமான மெகா மோசடி

ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி... மேலும் பார்க்க

Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?

ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவர... மேலும் பார்க்க

பஞ்சாப்: மணமகள் மீது ரூ.8.5 கோடியை மழையாக பொழிந்தார்களா உறவினர்கள்? - வைரல் வீடியோவின் பின்னணி!

திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. திருமணத்தில் ... மேலும் பார்க்க

ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்ல... மேலும் பார்க்க