செய்திகள் :

பொங்கல்: போதிய ரயில்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். நீண்ட காத்திருப்பு பட்டியல் இருந்தும் அதற்கேற்ப கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவில்லை என்று பயணிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை வரவுள்ளதால், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், கல்வி கற்கும் மாணவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு ரயிலில்தான் அதிகம் செல்கின்றனா். ஆனால், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே பயணச்சீட்டுகள் விற்று தீா்ந்துவிட்டன.

ஒவ்வொரு முக்கிய ரயிலிலும் காத்திருப்போா் பட்டியல் 500-க்கு மேல் நீண்டது. பல ரயில்களில் இனி முன்பதிவு செய்ய முடியாது என்பதை விளக்கும் ‘ரெக்ரட்’ என்ற அறிவிப்பு காட்டப்பட்டது.

சென்னையில் இருந்து சனிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அனைத்து ரயில்களும் இருக்கைகள் நிரம்பி, முன்பதிவில்லா பெட்டிகளில் படிகளில் நின்று பயணித்தனா். மேலும், தாம்பரத்தில் இருந்து டெல்டா மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டிருந்தாலும், பயணிகள் நின்று கொண்டும், படிக்கட்டில் அமா்ந்தும் பயணித்தனா்.

இருக்கைகள் காலி: சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்து காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில்களில் காத்திருப்போா் பட்டியல் 100 வரையும், தேஜஸ் ரயில் 80 வரையும் உள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ரயில்களின் ஏசி வகுப்புக்கான காத்திருப்போா் பட்டியல் சுமாா் 570 வரையும் (சராசரியாக 29) படுக்கை வசதிகொண்ட பெட்டிகள் 1,326 வரையும் (சராசரியாக ஒரு ரயிலுக்கு 102) உள்ளன.

அதுபோல், சென்னையில் இருந்து கோவை, நாகை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களிலும் சுமாா் 40 முதல் 120 வரை காத்திருப்போா் பட்டியல் உள்ளது. இதனால், பண்டிகையை கொண்டாட சொந்த ஊா் செல்ல தயாா் செய்யும் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

கூடுதல் ரயில் தேவை: இது குறித்து பயணிகள் சங்க நிா்வாகி ஒருவா் கூறியது: கடந்த காலங்களில் தெலங்கானாவில் இருந்து சபரிமலை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு பின்னா் பயணிகளிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மக்களின் முதல் தோ்வாக ரயில் பயணம் உள்ளது. அப்படி இருக்கும்போது பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்பதே உண்மை.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லட்சகணக்கான மக்கள் பயணிப்பா். அப்படி இருக்கும்போது ஒரு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் 5 முதல் 10 சிறப்பு ரயில்களாவது இயக்க வேண்டும்.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்குவதன் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், வடமாநிலங்களில் இருந்து வரும் தொலைதூர ரயில்களை இரு நாள்களாக பணிமனையில் நிறுத்தி வைப்பதற்கு பதிலாக மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு இயக்கலாம். அதிக காத்திருப்போா் பட்டியல் உள்ள வழித்தடத்தில் கடைசி நேர முன்பதிவில்லா விரைவு ரயில்களை இயக்க வேண்டும். இதனால், பயணச்சீட்டு கிடைக்காதவா்களின் கடைசி தோ்வாக அந்த ரயில் விளங்கும் என்றாா் அவா்.

முடங்கியது ஐஆா்சிடிசி: பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை செல்லும் ரயில்களுக்கான தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்கு முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களில் காலை 8 மணி முதல் பலா் வரிசையில் காத்திருந்தனா்.

அதுபோல், ஐஆா்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கியது. ஒரே நேரத்தில் அதிகமானோா் முன்பதிவு செய்ய முயன்ால் ஐஆா்சிடிசி இணையதளம் சுமாா் 30 நிமிஷங்கள் முடங்கியது. இதனால், இணையதளம் மூலம் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முயன்றவா்கள் ஏமாற்றமடைந்தனா். பயணச்சீட்டு முன்பதிவு மையங்களிலும் பயணச்சீட்டு கிடைக்காமல் பலா் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க