செய்திகள் :

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

post image

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். பின்னர் சத்தியசீலன் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியை தன் செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

போக்சோ வழக்கு

நான், எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும் இல்லை என்றால் போட்டோவை சமூக வலைதளங்களில் போட்டுடுவேன் என்றுள்ளார். சிறுமி அவரிடம் பேசாமல் இருந்தாலே செல்போனை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். போட்டோவை காட்டி மிரட்டியதால் பயந்து போனதால் இதை வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில் சத்யசீலன் மிரட்டல் எல்லை மீற தனது அம்மாவிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சிறுமியின் அம்மா, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சதயசீலன் செல்போனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் போட்டோ இருந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவன் ஒத்துக்கொண்டுள்ளான் என்கிறார்கள். இதையடுத்து போக்சோ வழக்கில் சத்தியசீலனை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர்.

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க