போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி
பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொடங்கிவைத்தாா். கோட்ட கலால் அலுவலா் ஆ. திருநாவுக்கரசு போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகளை விளக்கினாா். பொன்னமராவதி காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பேரணியில் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் சென்றனா். மேலும் கலைக்குழு மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தனி வருவாய் ஆய்வாளா்கள் பாண்டியன், ராஜா, துணை வட்டாட்சியா்கள் சேகா், ராம்குமாா், திருப்பதி வெங்கடாசலம் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், விஏஓக்கள், உதவியாளா்கள், பேரூராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.